Home | Techie Talk | Story Time | About | Contact

Tuesday, January 12, 2010

ஆயிரத்தில் ஒருவன்

இது நாளை வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிற புதிய "ஆயிரத்தில் ஒருவன்" பற்றி இல்லைங்கோ... நம்ம புரட்சித் தலைவர் நடித்து 1965 ஆம் ஆண்டு வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிய அந்த "ஆயிரத்தில் ஒருவன்" பற்றியது....


# பெரும் கடன் தொல்லையால் கஷ்ட்டப்பட்டுக்கொண்டிருந்த பி.ஆர்.பந்துலு, அதில் இருந்து மீள்வதற்க்காக MGR இன் உதவியுடன் இந்தத் திரைப்டத்தினை ஆரம்பித்தார்.

# எனினும் பெரும் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாகவே ஆயிரத்தில் ஒருவன் தயாரிக்கப்பட்டது.

# இது தான் MGR - ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் திரைப்படம்.

# இது தான், (அந்தக் காலகட்டத்தில்) எம்.எஸ்.விசுவநாதன் - டி.கே.ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி திரைப்படம். பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்!!! (பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இருவரும் 'எங்கிருந்தோ வந்தான்' எனும் திரைப்படத்தில் இணைந்தனர்)

# அந்த காலகட்டத்திலே இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பங்கள் ஆங்கில திரைப்படங்கள் போல பெரும் வரவேற்பைப் பெற்றது.

# படம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்து வசுலில் சாதனைப் படைத்தது. இன்றும் கூட மறு-திரையிடலிலும் நல்ல வசுல் செய்கின்றது.


இதற்கு மேலே மொக்கைப்போட மனசு இடம் தரமாட்டேங்கிறது. எனவே அம்புட்டு தான் அந்த ஆயிரத்தில் ஒருவன் பற்றி. ஒருவேளை இந்த புதிய ஆயிரத்தில் ஒருவனுக்கு டிக்கட் கிடைத்தால், அது பற்றியும் ஒரு மொக்கை விரைவிலே :-)

Labels: , , ,

Monday, January 04, 2010

33-வது புத்தகக் கண்காட்சி 2010, சென்னை

இந்த ஜனவரி 1 தந்த சில கசப்பான அனுபவத்தால், இரண்டாம் தேதி மந்தமாகவே தொடங்கியது, ஏனோ மனம் எதிலுமே நாட்டம் செலுத்தவில்லை, சரி என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், நம்ம சென்னையில் நடக்கும் 33வது புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வந்தது. இதுதான் வாஙக வேண்டும் என்று நான் எந்த பட்டியலும் தயார் செய்யாததால், சரி ஒரு முன்னோட்டமாக சென்று வரல்லாம் என்று கிளம்பினேன்.

கண்காட்சியில், என்னுடைய அனுபவங்கள் சில:

# கண்காட்சி நடைப்பேறும் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளியை நான் அடையும் போது நேரம் சரியாக மதியம் 12 மணி. அன்று விடுமுறை நாள் என்றாலும், அங்கிருந்த கூட்டம் ஏனோ குறைவாகவே இருப்பது போல எனக்குத் தோன்றியது.

# இந்த வருடம், வாயிலில் அலங்காரம் சற்று அதிகமாக இருப்பது போல ஒரு எண்ணம். தொடக்கவிழாவிற்கு கலைஞ்ர் வந்ததால் இருக்கலாம்.

# ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள் - இவர்களைப்பற்றி எல்லா பதிப்பகமும் புத்தங்கள் போட்டிருப்பர் போல. நிறைய ஸ்டால்கலில் இந்த புத்தகங்களைதாம் கண்களில் படும் இடங்களில் எல்லாம் பார்க்கமுடிந்தன.

# ஆனந்த விகடன் மற்றும் கிழக்குப் பதிவகத்தில் இளம் வாசகர்களின் கூட்டம் அதிகமாகவே தென்பட்டது. விளம்பரங்களில் அதிகமாக செலவு செய்யாமல், நவீன இண்டர்நெட் வசதிகளைக் கொண்டு கிழக்குப் பதிவகத்தின் இத்தகைய வரவேற்பு நிச்சயம ஒரு வெற்றிதான்.

# எழுத்துலகில் சுஜாதா சார் என்றுமே சூப்பார் ஸ்டார் தான். உயிர்மையில் அவருடைய புத்தகங்கள் இருந்த இடத்தில் நல்ல கூட்டம்.

# சில ஸ்டால்களில் விசிறி/ படிக்கட்டுகள் போல புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தது பார்க்க அழகாக இருந்தது.

# சில பதிவகங்கள் 1 வாஙகினால் 1 இலவசம், 3 வாங்கினால் 2 இலவசம், 6 வாங்கினால் 2 இலவசம் என்று இலவசகங்களைப் பொழிந்துக்கொண்ருந்தனர்.

# குழந்தைகளுக்காக வரைகலைப் புத்தகங்கள், படக்கதைப் புத்தகங்கள் மற்றும் சீடிக்கள் விற்க்கும் ஸ்டால்களிலும் நல்ல கூட்டம். அனால் சில ஸ்டால்கள், தள்ளுபடியில் சட்டை வாஙகும் இடங்களில் சட்டைகளைக் குவித்து வைப்பது போல குழந்தைகள் புத்தகங்களை குவித்து வைத்து இருந்தனர்.

# ஒரு ஸ்டாலில், சிறுவர்களுக்காக அறிவியல் விளையாட்டு பொருட்கள் விற்றுக்கொண்ருத்தனர். பூதக்கண்ணாடி, பழங்கால தொலைநோக்கி என்று பொருட்கள் ஆர்வத்தை தூண்டிண. ஒரு ஸ்டாலில் கிரகணங்களை பார்ககும் கண்ணாடிககளை மட்டும் விற்றுக்கொண்டிருந்தனர்!!!

# சில அழகான இளம்பெண்கள் "இப்படிக்கு சூர்யா" புத்தகத்தில் இருந்த சூர்யாவின் புகைப்படங்களை சத்தம் போட்டே ரசித்துக் கொண்டிருந்தனர். எம்பூட்டூ கிரேஸ் இந்த ஆளூ மேல!!!!

# ஒரு இளம்பெண், "சீக்கிரம்... சீக்கிரம்..." என்று தனது தந்தையை அவசரப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த மாதிரி இடஙகளுக்கு ஒற்ற பொறுமையுள்ளவர்களையே உடன் அழைத்து வருவது நல்லது. நல்லவேளை நான் தனியாகவே சென்றிருந்தேன்.

# ஆச்சரியமாக, இந்த வருடம், கழிவறைகள் சுத்தமாக இருந்தன. ஒருவேளை அப்பொழுதுதான் கண்காட்சி தொடங்கிய நேரம் என்பதாலும் இருக்கலாம்.

# சில பகுதிகளில் இன்னும் ஸ்டால்கள் அமைக்கும் வேலை நடந்துக்கொண்டிருந்தது. தட்... தட்... தட். என்று தட்டிக்கொண்டிருந்தனர்.

# அரங்கின் உள்ளே வினியோகித்த துண்டுப் பிரசுரங்கள், எல்லா இடங்களிலும் வீசப்பட்டுக்கிடந்தன. எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் இந்த விசயத்தில் நாம் திருந்தமாட்டோம் என்று தான் தோன்றுகிறது.

# வெளியே வரும்போது, ஒருவர் கூடையில் வைத்து மசாலா கலந்த வறுத்த கடலை விற்றுக்கொண்டிருந்தார். விலை ரூபாய் ஐந்து. அளவு கொஞசம் குறைவு தான் ஆனால் ருசியாக இருந்தது.

Labels: , ,

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் வந்துட்டான்!!!

பிடிக்குதோ... இல்லையோ... கடந்த ஒரு வாரமாய் நம்ம ஆளுங்க ரொம்ப ஆர்வமாய் இருந்த ஒரு விசயம் - நம்ம இளைய தளபதி விஜயின், இல்லை.. இல்லை.. சன் பிக்ஸ்ட்சர் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்".

புறக்கனிக்கலாமா? வேண்டாமா? என்று தமிழர்களை வலையுலகில் முட்டி மோத வைத்து, சன் தொலைக்காட்சியிலோ நொடிக்கு பத்து தடவை வந்து குழந்தைகளையும் ரசிகர்களையும் கவர்ந்து (சிலரை நிச்சயம் இம்சித்தும்), இதோ இன்று தமிழக வெள்ளித்திரைகளில் தனது ஓட்டத்தை தொடங்கியுள்ளான் இந்த புதிய வேட்டைக்காரன்!!!

இந்த ஓட்டம் வெற்றி விழா வரை போகுமா.. இல்லை கூடிய சீக்கிரம் திரையரங்குகளை விட்டே ஒடுமா.. என்பதை காலம் தான் பதில் சொல்லனும்...


Labels: , ,

Saturday, December 12, 2009

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

இன்று டிசம்பர் 12. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 60-வது பிறந்தநாள்.

இவரை ஒரு முறையாது நேரில் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று. சிலருக்கு இது அல்பமாக கூட இது தெரியலாம். இது ஏன் எதற்கு என்று, எல்லாம் இதுவரை நான் அராய்ந்தது இல்லை. ஏனோ பார்க்க வேண்டும், பழக வேண்டும் என்று ஒரு ஆசை. இன்னும் நிறைவேராத ஒரு ஆசை.

நான் சிறுவனாக இருக்கும் போது இவர் மீதும், இவரது ஸ்டைல் மீதும் உண்டான அந்த பிரமிப்பு இன்று வரை என்னிடம் குறையவே இல்லை.

அது தான் ரஜினிகாந்த்!!!

இந்த பிறந்த நாளைக்கும் தலைவருக்கு நேரில் வாழ்த்து கூற முடியவில்லை. சரி அதனால் என்ன, இங்கேயே சொல்லிடலாம்னு தான் இப்படி ஒரு பதிவு.

அப்படியே எனக்குப் பிடித்த, தலைவரின் டாப் 5 திரைப்படங்களின் பட்டியல்:
1. பாட்ஷா
2. முள்ளும் மலரும்
3. தில்லு முல்லு
4. நெற்றிக்கண்
5. அண்ணாமலை

உங்களுக்குப் பிடித்த தலைவரின் திரைப்படங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


Labels: , ,

Wednesday, November 11, 2009

தமிழில் முதன்முறையாக...

நெடுநாள்... இல்லை, இல்லை பல வருட ஆசை இது - தமிழில் ஒரு பதிவு தொடங்கவேண்டும் என்று. எப்படி எல்லாம் தாமதம் ஆகலாமோ... அப்படி எல்லாம் தாமதம் ஆகி, அதனையும் தாண்டி தாமதமோ தாமதம் ஆகி, இன்று தான் அந்த ஆசை நிறைவேறப்போகிறது. என்ன ஒன்று புதிதா ஏதும் வலைப்பதிவு தொடங்காமல் ஏற்கனவே இருக்க இந்த http://vettyofficer.blogspot.com வலைமப்பதிவிலேயே எழுதுகிறேன்.

தமிழில் தட்டச்சு செய்யறதுதான், கொஞ்சம் கஷ்டமா இருக்கு... போக போக பழகிடும்னு நினைக்கிறேன்...

அதைவிட முக்கியம், அடுத்து தொடர்ந்து பதிவு போடுவேனாங்கிறது தான்.

போடுவேன்னு தான் இப்போதைக்கு நினைக்கிறேன். இந்த மதிரி சின்ன சின்ன நம்பிக்கை தானே வழ்க்கை!!!

Labels: