Home | Techie Talk | Story Time | About | Contact

Monday, January 04, 2010

33-வது புத்தகக் கண்காட்சி 2010, சென்னை


 
 
இந்த ஜனவரி 1 தந்த சில கசப்பான அனுபவத்தால், இரண்டாம் தேதி மந்தமாகவே தொடங்கியது, ஏனோ மனம் எதிலுமே நாட்டம் செலுத்தவில்லை, சரி என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், நம்ம சென்னையில் நடக்கும் 33வது புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வந்தது. இதுதான் வாஙக வேண்டும் என்று நான் எந்த பட்டியலும் தயார் செய்யாததால், சரி ஒரு முன்னோட்டமாக சென்று வரல்லாம் என்று கிளம்பினேன்.

கண்காட்சியில், என்னுடைய அனுபவங்கள் சில:

# கண்காட்சி நடைப்பேறும் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளியை நான் அடையும் போது நேரம் சரியாக மதியம் 12 மணி. அன்று விடுமுறை நாள் என்றாலும், அங்கிருந்த கூட்டம் ஏனோ குறைவாகவே இருப்பது போல எனக்குத் தோன்றியது.

# இந்த வருடம், வாயிலில் அலங்காரம் சற்று அதிகமாக இருப்பது போல ஒரு எண்ணம். தொடக்கவிழாவிற்கு கலைஞ்ர் வந்ததால் இருக்கலாம்.

# ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள் - இவர்களைப்பற்றி எல்லா பதிப்பகமும் புத்தங்கள் போட்டிருப்பர் போல. நிறைய ஸ்டால்கலில் இந்த புத்தகங்களைதாம் கண்களில் படும் இடங்களில் எல்லாம் பார்க்கமுடிந்தன.

# ஆனந்த விகடன் மற்றும் கிழக்குப் பதிவகத்தில் இளம் வாசகர்களின் கூட்டம் அதிகமாகவே தென்பட்டது. விளம்பரங்களில் அதிகமாக செலவு செய்யாமல், நவீன இண்டர்நெட் வசதிகளைக் கொண்டு கிழக்குப் பதிவகத்தின் இத்தகைய வரவேற்பு நிச்சயம ஒரு வெற்றிதான்.

# எழுத்துலகில் சுஜாதா சார் என்றுமே சூப்பார் ஸ்டார் தான். உயிர்மையில் அவருடைய புத்தகங்கள் இருந்த இடத்தில் நல்ல கூட்டம்.

# சில ஸ்டால்களில் விசிறி/ படிக்கட்டுகள் போல புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தது பார்க்க அழகாக இருந்தது.

# சில பதிவகங்கள் 1 வாஙகினால் 1 இலவசம், 3 வாங்கினால் 2 இலவசம், 6 வாங்கினால் 2 இலவசம் என்று இலவசகங்களைப் பொழிந்துக்கொண்ருந்தனர்.

# குழந்தைகளுக்காக வரைகலைப் புத்தகங்கள், படக்கதைப் புத்தகங்கள் மற்றும் சீடிக்கள் விற்க்கும் ஸ்டால்களிலும் நல்ல கூட்டம். அனால் சில ஸ்டால்கள், தள்ளுபடியில் சட்டை வாஙகும் இடங்களில் சட்டைகளைக் குவித்து வைப்பது போல குழந்தைகள் புத்தகங்களை குவித்து வைத்து இருந்தனர்.

# ஒரு ஸ்டாலில், சிறுவர்களுக்காக அறிவியல் விளையாட்டு பொருட்கள் விற்றுக்கொண்ருத்தனர். பூதக்கண்ணாடி, பழங்கால தொலைநோக்கி என்று பொருட்கள் ஆர்வத்தை தூண்டிண. ஒரு ஸ்டாலில் கிரகணங்களை பார்ககும் கண்ணாடிககளை மட்டும் விற்றுக்கொண்டிருந்தனர்!!!

# சில அழகான இளம்பெண்கள் "இப்படிக்கு சூர்யா" புத்தகத்தில் இருந்த சூர்யாவின் புகைப்படங்களை சத்தம் போட்டே ரசித்துக் கொண்டிருந்தனர். எம்பூட்டூ கிரேஸ் இந்த ஆளூ மேல!!!!

# ஒரு இளம்பெண், "சீக்கிரம்... சீக்கிரம்..." என்று தனது தந்தையை அவசரப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த மாதிரி இடஙகளுக்கு ஒற்ற பொறுமையுள்ளவர்களையே உடன் அழைத்து வருவது நல்லது. நல்லவேளை நான் தனியாகவே சென்றிருந்தேன்.

# ஆச்சரியமாக, இந்த வருடம், கழிவறைகள் சுத்தமாக இருந்தன. ஒருவேளை அப்பொழுதுதான் கண்காட்சி தொடங்கிய நேரம் என்பதாலும் இருக்கலாம்.

# சில பகுதிகளில் இன்னும் ஸ்டால்கள் அமைக்கும் வேலை நடந்துக்கொண்டிருந்தது. தட்... தட்... தட். என்று தட்டிக்கொண்டிருந்தனர்.

# அரங்கின் உள்ளே வினியோகித்த துண்டுப் பிரசுரங்கள், எல்லா இடங்களிலும் வீசப்பட்டுக்கிடந்தன. எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் இந்த விசயத்தில் நாம் திருந்தமாட்டோம் என்று தான் தோன்றுகிறது.

# வெளியே வரும்போது, ஒருவர் கூடையில் வைத்து மசாலா கலந்த வறுத்த கடலை விற்றுக்கொண்டிருந்தார். விலை ரூபாய் ஐந்து. அளவு கொஞசம் குறைவு தான் ஆனால் ருசியாக இருந்தது.

Labels: , ,

2 Comments:

Blogger Arul said...

Finally you did not buy any book...Right?

9:41 PM  
Blogger Vetty Officer said...

@Arul
அப்பாவிற்க்காக சில அரசியல்/ஈழம் பற்றிய புத்தகங்கள், எனக்காக "விஜயகாந்த்" என்கிற புத்தகம் மட்டுமே இம்முறை வாங்கினேன்.

இன்னொரு தடவையும் போவேன்னு நினைக்கிறேன். வேறு ஒரு நல்ல யோசனை இருக்கு. அப்புறமா இங்கே சொல்றேன்.

10:45 PM  

Post a Comment

<< Home